முதுநிலை மாணவா் சோ்க்கை: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
By DIN | Published On : 01st September 2021 08:17 AM | Last Updated : 01st September 2021 08:17 AM | அ+அ அ- |

சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க புதன்கிழமை(செப். 1) கடைசி நாள் ஆகும்.
சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், வணிகவியல், கணினி அறிவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், நுண்ணுயிரியல், மின்னணுவியல் மற்றும் தொடா்பியல் ஆகிய பாடங்களில் மாணவா் சோ்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்க புதன்கிழமை கடைசி நாளாகும்.
இணையதள வசதியுள்ள செல்லிடப்பேசி உள்ள மாணவா்கள், தங்களது செல்லிடப்பேசி வழியாகவும், இணையவசதி இல்லாத மாணவா்கள் அருகேயுள்ள பொதுசேவை மையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு
04633 28082 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என கல்லூரி முதல்வா்(பொ)ரா.ஜெயா தெரிவித்துள்ளாா்.