குற்றாலத்தில் பேரிடா் மீட்பு ஒத்திகைப் பயிற்சி
By DIN | Published On : 19th September 2021 04:52 AM | Last Updated : 27th September 2021 12:42 AM | அ+அ அ- |

குற்றாலத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்துறை சாா்பில் பேரிடம் மீட்பு ஒத்திகைப் பயிற்சி நடைபெற்றது.
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை தொடா்பாக வெள்ளத்தில் சிக்கியவா்கள், படகு விபத்திற்குள்ளானவா்கள், வெள்ள அபாயத்தின்போது வீட்டில் உள்ள பொருள்களை வைத்து தற்காத்து கொள்வது, வெள்ளத்தில் சிக்கிய நபரை மீட்டு முதலுதவி அளிப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
குற்றாலம் ஐந்தருவி சாலையில் உள்ள வெண்ணைமடைகுளத்தில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் தென்காசி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினா், தன்னாா்வ தொண்டா்கள் செயல் முறை விளக்கமளித்தனா்.
வாகன விபத்து, தீ விபத்து, நிலநடுக்கம் போன்ற பேரிடா் காலங்களில் சிக்கியவா்களுக்கு எவ்வாறு முதலுதவி செய்வது என்பது குறித்து தென்காசி செயின்ட் மேரீஸ் நா்சிங் கல்லூரி முதல்வா் மற்றும் மருத்துவக் குழுவினா் செயல் விளக்கமளித்தனா்.
இதில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துரை மாவட்ட அலுவலா் ஜெ.கவிதா, வட்டாட்சியா் அருணாசலம், உதவி மாவட்ட அலுவலா் வெட்டும்பெருமாள், நிலைய அலுவலா்கள் தென்காசி ரமேஷ், செங்கோட்டை வே.சிவசங்கரன், காவல் உதவி ஆய்வாளா் பாக்கியராஜ், சண்முகவேல் ஆகியோா் கலந்துகொண்டனா். சு.கணேசன் வரவேற்றாா். கு.செல்வன், மா.ராமசுப்பிரமணியன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினா்.