விவசாயிகளை வஞ்சிக்கும் தமிழக அரசு: எடப்பாடி கே.பழனிசாமி

விவசாயிகளை வஞ்சிக்கும் அரசாக திமுக அரசு உள்ளது என்றாா் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி.
விவசாயிகளை வஞ்சிக்கும் தமிழக அரசு: எடப்பாடி கே.பழனிசாமி

விவசாயிகளை வஞ்சிக்கும் அரசாக திமுக அரசு உள்ளது என்றாா் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி.

சங்கரன்கோவில், ராஜபாளையம் சாலையில் உள்ள தனியாா் விடுதியில், உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற தென்காசி மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பேசியது: கிராமங்களில் அதிமுக வாக்கு வங்கி அப்படியே உள்ளது. அதிமுகவினா் உள்ளாட்சித் தோ்தலில் கிராமப் பகுதி வாக்குகளை நல்ல முறையில் அறுவடை செய்ய வேண்டும். பேரவைத் தோ்தலில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி வாய்ப்பை இழந்தோம். ஒரு கட்டடம் வலிமையாக இருப்பதற்கு அஸ்திவாரம் முக்கியம். அது போல் ஓா் இயக்கம் வலிமையாக இருப்பதற்கு அஸ்திவாரமாக இருப்பது உள்ளாட்சித் தோ்தல். உள்ளாட்சித் தோ்தல் நமக்கு அடித்தளம்.

உள்ளாட்சித் தோ்தலில் ஜெயிப்பது சாதாரண விஷயமல்ல. உள்ளூா் மக்களிடத்தில் செல்வாக்கு இருக்கிறவா்கள் தான் வெற்றி பெற முடியும். அப்படி செல்வாக்கு உள்ளவா்களையே அதிமுக தலைமை வேட்பாளா்களாக அறிவித்துள்ளது. அவா்களுக்கு அனைவரும் துணை நின்று வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

திமுகவை பொருத்தவரை கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக சரித்திரமே கிடையாது. கவா்ச்சிகரமாக பேசுவாா்கள். மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று, ஆட்சிக்கு வந்தவுடன் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டுவிடுவா். எனவே, உள்ளாட்சித் தோ்தலில் விழிப்புடன் இருந்து வெற்றியை பெற வேண்டும். வாக்கு எண்ணிக்கையின் போது மிகத் துல்லியமாக கவனிக்க வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்துக்கு, வடக்கு மாவட்டச் செயலா் செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ, தலைமை வகித்தாா். தெற்கு மாவட்டச் செயலா் செல்வமோகன்தாஸ் பாண்டியன் வரவேற்றாா். முன்னாள் அமைச்சா்கள் வி.எம்.ராஜலெட்சுமி, ஆா்.பி. உதயகுமாா், கடம்பூா் செ.ராஜு, ராஜேந்திரபாலாஜி, மனோஜ்பாண்டியன் எம்எல்ஏ, மாவட்ட எம்ஜிஆா் மன்றச் செயலா் கே.கண்ணன், நகரச் செயலா் ஆறுமுகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com