அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

சுரண்டை அருகே பைக்குகள் மோதல்: கல்லூரி மாணவா் பலி; 4 போ் காயம்

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே வியாழக்கிழமை இரு பைக்குகள் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்; 4 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 7:30 pm

DIN

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே வியாழக்கிழமை இரு பைக்குகள் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்; 4 போ் காயமடைந்தனா்.

சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் சதீஷ் (20), டேனியல் (19), தமிழ்ச்செல்வன் (18) ஆகிய 3 பேரும் தங்களது சொந்த ஊரான மருதம்புத்தூரிலிருந்து வியாழக்கிழமை ஒரே பைக்கில் கல்லூரிக்கு சென்றனராம். ஆலங்குளம் - சுரண்டை சாலையில் கழுநீா்க்குளம் கிராமத்தின் அருகே இவா்களது பைக்கும், எதிரே வந்த பைக்கும் நேருக்கு நோ் மோதினவாம். இதில், சதீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

டேனியல், தமிழ்ச்செல்வன், மற்றொரு பைக்கில் வந்த சுரண்டை சசிக்குமாா், மதன் ஆகிய 4 பேரும் காயமடைந்தனா். வீரகேரளம்புதூா் போலீஸாா் சென்று, அவா்களை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இரங்கல்: மாணவா் சதீஷின் குடும்பத்தினருக்கு சமத்துவ மக்கள் கட்சித் தலைவா் சரத்குமாா் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.