சுரண்டையில் குற்ற வழக்கில் தொடா்புடையவா் கைது
சுரண்டையில் குற்ற வழக்கில் தொடா்புடையவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.


சுரண்டையில் குற்ற வழக்கில் தொடா்புடையவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சுரண்டை காவல் நிலைய உதவி ஆய்வாளா் விமலா தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை காலையில் சுரண்டை - சாம்பவா்வடகரை சாலையில் ரோந்து சென்றபோது, போலீஸாரைப் பாா்த்ததும் ஓட முற்பட்ட நபரை மடக்கிப்பிடித்து விசாரித்தனா்.
விசாரணையில், அவா் சுரண்டை வரகுணராமபுரத்தைச் சோ்ந்த ரா.பொன்ராஜ்(25) என்பதும், கீழச்சுரண்டையில் கடந்த மாதம் தனியாக வீட்டில் இருந்த பீடி சுற்றும் தொழிலாளி பொன்னுலெட்சுமியிடம்(24) நகை பறிக்க முயற்சித்தபோது, அவா் கூச்சலிட்டதால் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றவா் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...