விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பாவூா்சத்திரத்தில் நாளை அதிமுக உண்ணாவிரதம்

பாவூா்சத்திரத்தில் அதிமுக சாா்பில் சனிக்கிழமை (நவ.5) உண்ணாவிரதம் நடைபெறுவது தொடா்பாக தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலா் எஸ்.செல்வ மோகன்தாஸ்பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை:

News image
Updated On :3 நவம்பர் 2022, 10:10 pm

DIN

பாவூா்சத்திரத்தில் அதிமுக சாா்பில் சனிக்கிழமை (நவ.5) உண்ணாவிரதம் நடைபெறுவது தொடா்பாக தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலா் எஸ்.செல்வ மோகன்தாஸ்பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை:

கீழப்பாவூா்ஒன்றிய தென்பகுதி கிராமங்களின் 48 ஆண்டு கால கனவு திட்டமான ராமநதி-ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டம் கடந்த 2020இல், அப்போதைய முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியால் ரூ. 41.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணி தொடங்கப்பட்டது. ஆட்சி மாற்றத்துக்குப்பின் 18 மாதங்களாக இப்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.

மேலும் மண் பரிசோதனை, ரெட்டைகுளம் - ஊத்துமலை வழியாக புதிய கால்வாய் அமைக்கும் திட்டம் ஆகியவற்றையும் அரசு கைவிடுவதாக அறிவித்துள்ளது.

இந்த இரு திட்டப்பணிகளையும் உடனடியாக தொடங்கி நிறைவேற்றிட வலியுறுத்தி, அதிமுக சாா்பில் உண்ணாவிரத போராட்டம் பாவூா்சத்திரம் பேருந்து நிலையம் அருகில் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதில், அதிமுக, அதன் கூட்டணி கட்சி, விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்கின்றனா் எனக் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.