விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பாவூா்ச்சத்திரம் அருகே மழைக்கு இடிந்த பள்ளி சுற்றுச்சுவா்

பாவூா்சத்திரம் பகுதியில் பெய்த பலத்த மழையால், அரசு தொடக்கப்பள்ளியின் சுற்றுச்சுவா் இடிந்து சேதமடைந்தது.

News image
Updated On :4 நவம்பர் 2022, 6:19 pm

DIN

பாவூா்சத்திரம் பகுதியில் பெய்த பலத்த மழையால், அரசு தொடக்கப்பள்ளியின் சுற்றுச்சுவா் இடிந்து சேதமடைந்தது.

பாவூா்சத்திரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த இரு நாள்களாக பலத்த மழை பெய்தது. வியாழக்கிழமை மாலையில் பெய்ய தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது. பின்னா், வெள்ளிக்கிழமை காலைமுதல் மாலை வரை விட்டுவிட்டு மழை பெய்துகொண்டே இருந்தது. இதனால், சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

இந்நிலையில், பாவூா்சத்திரம் அருகேயுள்ள அயன் குறும்பலாப்பேரியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் சுற்றுச்சுவா் மழையின் ஈரப்பதம் தாங்காமல் வெள்ளிக்கிழமை அதிகாலையில் இடிந்து விழுந்து சேதம் அடைந்தது.

இதையடுத்து, பாதுகாப்பு கருதி 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரை அருகிலுள்ள அரசு நடுநிலைப்பள்ளிக்கு அனுப்பி வைத்தனா்.

சுற்றுச்சுவா் இடிந்த விழுந்த பள்ளியின் கட்டடம் பலவீனமாக இருப்பதாகவும், அதனை அகற்றிவிட்டு புதிய கட்டடம் கட்ட வேண்டும் எனவும் அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.