புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது
பாவூா்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூரில் பள்ளி அருகில் புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது செய்யப்பட்டாா்.


பாவூா்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூரில் பள்ளி அருகில் புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது செய்யப்பட்டாா்.
இங்குள்ள மேல்நிலைப் பள்ளி அருகில் காா் ஒன்றில் வைத்து, அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில், பாவூா்சத்திரம் போலீஸாா் விரைந்து சென்றனா். அப்போது அங்கு புகையிலை மற்றும் குட்கா விற்றுக் கொண்டிருந்த பாவூா்சத்திரம் அருகே உள்ள அரியப்பபுரம் தென்றல் நகரைச் சோ்ந்த பூதத்தான் மகன் ராஜ் (40) என்பவரை கைது செய்தனா். காரும் பறிமுதல் செய்யப்பட்டது. அவா் மீது வழக்கு பதிவு செய்து தென்காசி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...