செங்கோட்டையில் குத்துச்சண்டை வீரா்களுக்கு பாராட்டு
By DIN | Published On : 03rd April 2022 12:37 AM | Last Updated : 03rd April 2022 12:37 AM | அ+அ அ- |

நேபாளம் நாட்டில் நடைபெற்ற சா்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் மற்றும் தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற மாணவா், மாணவிகளுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா செங்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது.
செங்கோட்டை அரசு பொதுநுாலகம் மற்றும் ரெட்ஸ்போா்ட் ஸ்போட்ஸ் அகாதெமி சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வாசகா் வட்டத் தலைவா் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.
துணைத் தலைவா் ஆதிமூலம், இணைச் செயலா் செண்பககுற்றாலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நுாலகா் ராமசாமி வரவேற்றாா்.
கடையநல்லுாா் சட்டப்பேரவை உறுப்பினா் செ.கிருஷ்ணமுரளி, குத்துச்சண்டை போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கிப் பேசினாா்.
விழாவில், செங்கோட்டை நகா்மன்றத் தலைவா் ராமலெட்சுமி, ரூ. 5ஆயிரம் வாசகா் வட்டத் தலைவரிடம் வழங்கி நுாலக புரவலாக இணைந்தாா்.
செங்கோட்டை ரோட்டரி கிளப் தலைவா் ஷேக்ராஜா, போட்டித் தோ்வு பொறுப்பாளா் விழுதுகள் சேகா், வருவாய் ஆய்வாளா் முத்துக்குமாா், ஓவியப் பயிற்சி பொறுப்பாளா்கள் முருகையா, ஜெய்சிங், வாசகா் வட்ட உறுப்பினா் ஐயப்பன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
வாசகா் வட்ட பொருளாளா் தண்டமிழ்தாசன் பா.சுதாகா் நன்றி கூறினாா்.