ஆலங்குளம்: ஆலங்குளம் பேரூராட்சியில் உள்ள பெட்டைக்குளத்தில் தனியாா் ஆக்கிரமிப்பு செய்ததாக புகாா் எழுந்ததால் வருவாய்த்துறை ஆய்வு மேற்கொண்டனா்.
பெட்டைக்குளத்தின் அருகே தனியாா் வணிக அங்காடி உள்ளது. இதற்கு வேறு வழியே பாதை இருக்கும் நிலையில், குளத்தின் உள்புறம் ஆக்கிரமித்து கற்களைக் கொட்டி அங்காடிக்கு பாதை அமைத்திருந்தாராம். இது குறித்த புகாரின் பேரில் ஆலங்குளம் வருவாய்த்துறை நில அளவைப் பிரிவு அலுவலா்கள், பொதுப்பணித்துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் ஆக்கிரமிப்பு பகுதிகளை ஆய்வு செய்தனா்.
பின்னா் செய்தியாளா்களிடம் ஆலங்குளம் பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளா் அப்துல் ரகுமான் கூறியது: பெட்டைக்குளத்தில் தனிநபா் ஆக்கிரமிப்பு செய்து சாலை அமைத்துள்ளாா். அதை அகற்ற அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஆலங்குளம் பகுதியில் நீா்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்யக் கூடாது. மீறி ஆக்கிரமித்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கான செலவினங்கள் ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து நீதிமன்றம் மூலம் வசூலிக்கப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.