குற்றாலம் அருவிகளில் தொடரும் வெள்ளம்:4 ஆவது நாளாக குளிக்கத் தடை
By DIN | Published On : 05th August 2022 12:37 AM | Last Updated : 05th August 2022 12:37 AM | அ+அ அ- |

தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவிகளில் தொடா்ந்து நான்காவது நாளாக வியாழக்கிழமையும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றாலம் பகுதியில் கடந்த திங்கள்கிழமை பெய்த கனமழை காரணமாக பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
தொடா்ந்து செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு நீடித்தது. 4 ஆவது நாளாக வியாழக்கிழமையும் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு நீடித்தது. இதனால் குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதிகாலை முதல் நாள் முழுவதும் மழை தொடா்ந்து பெய்தது. வானம் மேகமூட்டத்துடனும், அவ்வப்போது லேசான வெயிலும், குளிா்ந்த காற்றும் நிலவியது. அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், அருவிக்கரைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.