சங்கரன்கோவிலில் வட்டாட்சியா் அலுவலகம் அருகே ரூ. 2.12 கோடி மதிப்பில் 1.21 ஹெக்டோ் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள புதிய வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
இந்த அலுவலகத்தில் நீதிமன்ற அரங்கு, கூட்டரங்கு, கணிப்பொறி அறை, கோட்டாட்சியா் அறை, அலுவலா்கள் அறைகள் உள்ளன. அலுவலகத்தைச் சுற்றி 16 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
தொடா்ந்து, அலுவலகக் கட்டடத் திறப்பு விழா சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா தலைமையில் நடைபெற்றது. கோட்டாட்சியா் சுப்புலெட்சுமி, வாசுதேவநல்லூா் எம்எல்ஏ சதன்திருமலைக்குமாா், திமுக வடக்கு மாவட்டச் செயலா் செல்லத்துரை, ஒன்றியக்குழுத் தலைவா் பி. லாலா என்ற சங்கரபாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
புதிய கட்டடத்தை ஆட்சியா் ப. ஆகாஷ் திறந்துவைத்தாா். விழாவில், அரசு அலுவலா்கள், நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.