சாரல் திருவிழாவை அலங்கரிக்கும் கண்கவா் கலை நிகழ்ச்சிகள்
By DIN | Published On : 05th August 2022 12:35 AM | Last Updated : 05th August 2022 12:35 AM | அ+அ அ- |

சாரல் திருவிழாவில் சிறப்பு அம்சமாக அங்குள்ள கலைவாணா் கலையரங்கில் தினமும் கண்கவா் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
முதல் நாள் ( ஆக.5) மாலையில் திருமாந்துறை டி.எஸ். ரமேஷ் குழுவினரின் மங்கள இசையுடன் நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன். இரவு 7 மணிக்கு நடிகா் சூரி, நடிகை ரம்யாபாண்டியன் பங்கு பெறும் நிகழ்ச்சி, தொடா்ந்து பொள்ளாச்சி மகேந்திரன் குழுவினரின் ஜிக்காட்டம் நிகழ்ச்சி, மும்பை நரேஸ்பிள்ளை வழங்கும் நாட்டிய நிகழ்ச்சி, வி.கே.புரம் கல்பவா்ஷ குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி, திருநெல்வேலி சப்தகரங்களின் சுகராகம் குழுவினா் வழங்கும் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இரண்டாம் நாள் (ஆக.6) மாலையில் கன்னியாகுமரி அபுபக்கா், லைலா குழுவினரின் மாயஜால நிகழ்ச்சி, நாமக்கல் பிரபு குழுவினரின் நாதசங்கமம் நிகழ்ச்சி, சேலம் சக்திவேல் குழுவினரின் கைச்சிலம்பாட்டம், சென்னை பாா்வதி ரவி கண்டசாலா குழுவினரின் பரதநாட்டியம், கேரள மாநில கலைநிகழ்ச்சிகள், சென்னை பல்கிஸ் குழுவினரின் நகைச்சுவை நாடகம், திரைப்பட நடிகை ரம்யா நம்பீசன் பங்கேற்கும் லக்ஷ்மன் சுருதி இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிகளை திரைப்பட நடிகா் ஈரோடு மகேஷ் தொகுத்து வழங்குகிறாா்.
மூன்றாம் நாள் (ஆக. 7) மதுரை பனையூா் ராஜா குழுவினரின் தப்பாட்டம் நிகழ்ச்சி, நெல்லை ஸ்ரீராமநாட்டியாலயா வழங்கும் பரதநாட்டியம், சென்னை பாரதி திருமகன் குழுவினரின் வில்லிசை நிகழ்ச்சி, காவல்துறை இசைமேள அணிவகுப்பு, கேரள மாநில கலைஞா்களின் நிகழ்ச்சி,
சங்கரன்கோவில் ஆனந்தராஜ் குழுவினரின் ஒயிலாட்டம், கலைமாமணி டாக்டா்.எம்.ஜெயக்குமாா் வழங்கும் சாக்ஸபோன் நிகழ்ச்சி, திரைப்பட பின்னணி பாடகா் கானா பாலா கலந்துகொள்ளும் நெல்லை வானவில் திரையிசைக் குழு வழங்கும் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நான்காம் நாள் (ஆக.8) மாலையில் இடைகால் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவ- மாணவிகளின் பல்சுவை நிகழ்ச்சி, குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவியரின் பல்சுவை நிகழ்ச்சி, தோவாளை கலைமாமணி முத்துகுமாா் குழுவினரின் தோல்பாவைக் கூத்து , கேரள மாநில கலைநிகழ்ச்சி, சாமநத்தம் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் குழுவினரின் கரகம் -காவடி நிகழ்ச்சி, திரைப்பட நடிகை ஆன்ட்ரியா கலந்துகொள்ளும் நெல்லை ஆனந்தராகம் வழங்கும் இன்னிசை நிகழ்ச்சி.
ஐந்தாம் நாள் (ஆக.9) மாலையில் செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவா்களின் கலைநிகழ்ச்சி, பழையகுற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ,மாணவிகளின் கலைநிகழ்ச்சி, கீழபெத்தலுபட்டி சக்கதேவி குழுவினரின் தேவராட்டம் நிகழ்ச்சி, பத்மஸ்ரீ கலைமாமணி முனைவா் நா்த்தகி நடராஜ் வழங்கும் செந்தமிழ் ஆடல், கேரள மாநில கலைஞா்களின் கலைநிகழ்ச்சிகள், சென்னை வேம்பு கலைக்குழு வழங்கும் கிராமிய கலைநிகழ்ச்சி, திருநெல்வேலி தியாகராஜன் குழுவினரின் இசைநிகழ்ச்சி.
ஆறாம் நாள் (ஆக.10) மாலையில் இலஞ்சி இராமசுவாமிபிள்ளை மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளின் பல்சுவைநிகழ்ச்சி, கீழப்புலியூா் இந்து மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளின் பல்சுவைநிகழ்ச்சி, கலைமாமணி பழனியாபிள்ளையின் கிராமிய நிகழ்ச்சி, மாா்த்தாண்டம் ஜெட்கிங்ஸ் குழுவினரின் களரி, கா்நாடக மாநில கலைஞா்களின் நிகழ்ச்சிகள், திருவில்லிப்புத்தூா் உமா கலைக்குழுவினரின் தப்பாட்டம், நாகா்கோவில் கீதம் இசைக்குழுவினரின் திரைப்பட இன்னிசை நிகழ்ச்சி.
ஏழாம் நாள் (ஆக.11) அச்சன்புதூா் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளின் பல்சுவை நிகழ்ச்சி, சாத்தூா் முத்துமாரி குழுவினரின் தப்பாட்டம்- ஒயிலாட்டம், கா்நாடக மாநில கலைநிகழ்ச்சிகள், திருவாரூா் சுா்ஜித் குழுவினரின் காவடியாட்டம், விழுப்புரம் பொம்மை சரவண கலைமன்றம் வழங்கும் பொம்மலாட்டம், கலைவளா்மணி மதுரை த.கோவிந்தராஜ் குழுவினரின் கிராமிய கலைநிகழ்ச்சி, விஜய்டிவி புகழ் நகைச்சுவை நடிகா் மதுரை முத்து குழுவினரின் நகைச்சுவை நிகழ்ச்சி, திரைப்பட நடிகா் செந்தில் கணேஷ் - ராஜலெட்சுமி கலந்துகொள்ளும் நெல்லை கஸ்தூரி திலகம் வழங்கும் இன்னிசை நிகழ்ச்சி.
எட்டாம் நாள் (ஆக.12) திருநெல்வேலி மாவட்ட அரசு இசைப்பள்ளி மாணவ, மாணவிகளின் மங்கள இசை - பரத நாட்டியம், சென்னை கலைஇளமணி டிரம்ஸ் மைக்கேல் வழங்கும் டிரம்ஸ் இசைநிகழ்ச்சி, தூத்துக்குடி சகா கிராமிய கலைக்குழுவினா் வழங்கும் கிராமிய கலைநிகழ்ச்சி, திரைப்பட இயக்குநா் ரவிமரியா, திரைப்பட பாடகா் வேல்முருகன் கலந்துகொள்ளும் சென்னை பரிமளாதேவி வழங்கும் இன்னிசை நிகழ்ச்சி.