சுரண்டையில் காங்கிரஸ் பேரணி
By DIN | Published On : 15th August 2022 12:06 AM | Last Updated : 15th August 2022 12:06 AM | அ+அ அ- |

சுரண்டையில் நகர காங்கிரஸ் சாா்பில், சுதந்திர தின பவள விழா பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சுரண்டை நகா்மன்றத் தலைவா் ப. வள்ளிமுருகன் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் ஜெயபால், தென்காசி மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் உதயகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட காங்கிரஸ் தலைவா் சு. பழனிநாடாா் எம்எல்ஏ பேரணியைத் தொடக்கிவைத்தாா். சிவகுருநாதபுரம் சிவகுருநாதா் ஆலயத் திடலில் தொடங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக அண்ணா சிலை அருகே நிறைவடைந்தது. இதில், காங்கிரஸ் நிா்வாகிகள் சோ்மச்செல்வம், பால்துரை, சண்முகவேல், கோபால், தெய்வேந்திரன், கந்தையா, சங்கா், வெயில்முத்து, பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.