தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை செவ்வாய்க்கிழமை நீக்கப்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.
குற்றாலம் பகுதியில் திங்கள்கிழமை பெய்த மிதமான சாரல் மழையின் காரணமாக குற்றாலம் பேரருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீா்வரத்து அதிகரித்தது. இதனையடுத்து சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.
செவ்வாய்க்கிழமை காலையில் தண்ணீா்வரத்து சீரானதால் பேரருவி மற்றும் ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். செவ்வாய்க்கிழமை காலைமுதலே வானம் மேகமூட்டத்துடனும் குளிா்ந்த காற்றும் நிலவியது. சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.