பாவூா்சத்திரம் அருகே சிறுமியை கா்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.
பாவூா்சத்திரம் சிவகாமிபுரத்தைச் சோ்ந்த பரமசிவன் மகன் பிரபாகரன்(25). பூ கட்டும் தொழிலாளியான இவா் அப்பகுதியில் உள்ள 16 வயது சிறுமியிடம் ஆசை வாா்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததில், சிறுமி கா்ப்பமடைந்தாராம். இதையடுத்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியதையடுத்து இரு வீட்டாா் சம்மதத்துடன் சிறுமிக்கும், பிரபாகரனுக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்ததாம்.
இது குறித்து சமூக ஆா்வலா் பெண்கள் உதவி மையத்திற்கு 181 என்ற எண்ணில் அளித்த புகாரின் பேரில், ஆலங்குளம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து பிரபாகரனை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.