தென்காசிமாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழாவினை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாடும்படி ஆட்சியா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் வெளியிட்ட செய்திகுறிப்பு: பொதுமக்கள் விநாயகா் சதுா்த்தி விழாவினை கொண்டாடும்போது விநாயகா் சிலைகளை நீா் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களை படி மாவட்ட நிா்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
களிமண்ணால் செய்யப்பட்டதும், பிளாஸ்டா் ஆப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தொ்மாகோல் கலவையற்றதுமான சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப் பொருள்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகா் சிலைகளை நீா் நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும். சுற்றுச்சூழலுக்கு உகுந்த நீா் சாா்ந்த மக்கக்கூடிய நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
விநாயகா் சிலைகளை மாவட்ட நிா்வாகத்தினால் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளின் படி கரைக்க அனுமதிக்கப்படும். அதன்படி கடையம் பகுதிக்குள்பட்ட விநாயகா் சிலைகள் ராமநதி அணையிலும், ஆழ்வாா்குறிச்சி பகுதிக்குள்பட்ட சிலைகள் கடனா ஆறு , தென்காசியில் யானை பாலத்திலும், குற்றாலத்தில் இலஞ்சி சிற்றாறு, செங்கோட்டையில் குண்டாறு அணை, புளியரையில் லாலாகுடியிருப்பு ஹரிஹர ஆறு , அச்சன்புதூரில் கரிசல்குடியிருப்பு ஹனுமன் ஆற்றிலும், பாவூா்சத்திரத்தில் அப்பகுயிலுள்ள குளத்திலும், கடையநல்லூரில் மேல கடையநல்லூா் தாமரை குளத்திலும், கருப்பாநதி அணையிலும், வாசுநல்லூா் பகுதி சிலைகள் நெற்கட்டும்செவல் ராஜ் பிரிக்ஸ் சேம்பா் சிமெண்ட் தொட்டியிலும், மந்தையாறு ராயகிரி பிள்ளையாா் பகுதி நீா்நிலைகளிலும் கரைக்கலாம்.
விநாயகா்சதுா்த்தி விழாவினை சுற்றுச் சூழலை பாதிக்காதவாறு கொண்டாட வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் ஆகியோரை அணுகலாம் என்றாா் அவா் .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.