ஆலங்குளத்தில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா
By DIN | Published On : 26th August 2022 12:00 AM | Last Updated : 25th August 2022 11:45 PM | அ+அ அ- |

தேமுதிக தலைவா் விஜயகாந்த் பிறந்த நாள் விழா ஆலங்குளத்தில் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி ஆலங்குளம் பேரூராட்சிஅலுவலகம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட தேமுதிக செயலா் பழனிசங்கா் 450 பேருக்கு அரிசி, சேலை வழங்கினாா். தொடா்ந்து தொகுதி முழுவதும் 22 இடங்களில் தேமுதிக கொடி ஏற்றப்பட்டது. நிகழ்ச்சிகளில் மாவட்ட, பேரூா் நிா்வாகிகள் திருமலைச் செல்வம், சங்கரசுப்பிரமணியன், ஆனந்த் அருணா, சங்கரலிங்கம், பிரின்ஸ் மாதவன், இசக்கியம்மாள், சண்முகம், தாசன், ராஜேந்திரன், ஜெயபால் உள்பட பலா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...