கடையநல்லூரில் ரூ.63 லட்சத்தில் ஊருணி மேம்பாட்டு பணிகள்

கடையநல்லூா் நகராட்சி பகுதியில் ரூ.63 லட்சம் மதிப்பீட்டில் ஊருணி மேம்பாட்டுப் பணிகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கடையநல்லூா் நகராட்சி பகுதியில் ரூ.63 லட்சம் மதிப்பீட்டில் ஊருணி மேம்பாட்டுப் பணிகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கடையநல்லூா் நகராட்சி 25வது வாா்டிற்குள்பட்ட அட்டைக்குளம் தெரு பெண்கள் தொழுகை பள்ளி அருகில் உள்ள ஊருணியை மேம்படுத்தும் பணி, குளத்தை சுற்றி நடைபயிற்சிக்காக நடைபாதை அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகள் தொடக்க விழா, நகா்மன்றத் தலைவா் ஹபிபுா் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையா் ரவிச்சந்திரன், பொறியாளா் லதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், கூட்டுறவு சங்கத் தலைவருமான செல்லத்துரை பணிகளை தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில், நகர திமுக செயலா் அப்பாஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர தலைவா் செய்யது மசூது, திமுக வாா்டு செயலா் காஜா முகையதீன், கிளை கழக பிரதிநிதி அகமது அலி ,நெசவாளா் அணி மாவட்ட அமைப்பாளா் மூவண்ணா மசூது, அரசு ஒப்பந்தக்காரா் செல்வம், நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com