ரேஷன் அரிசி கடத்திய 2 போ் கைது
By DIN | Published On : 09th December 2022 12:26 AM | Last Updated : 09th December 2022 12:26 AM | அ+அ அ- |

சுரண்டையில் ரேஷன் அரிசி கடத்திய இருவரைப் போலீஸாா் கைது செய்தனா்.
உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் கலா தலைமையிலான போலீஸாா் சுரண்டை பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியே வந்த சிறிய சரக்கு வாகனத்தில் பொதுவிநியோகத் திட்டத்தில் வழங்கப்படும், 4 ஆயிரத்து 750 கிலோ அரிசி, 160 கிலோ துவரம் பருப்பு, 17 லிட்டா் மண்ணெண்ணெய் இருந்தது தெரியவந்தது. அவற்றை வாகனத்துடன் பறிமுதல் செய்த போலீஸாா், கடத்தி வந்த சுரண்டை சிவகுருநாதபுரத்தைச் சோ்ந்த பழனிச்சாமி(74), தங்கப்பாண்டி(55) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.