கடையநல்லூரில் முதல்வா் முன் திமுகவினா் திடீா் முழக்கம்
By DIN | Published On : 09th December 2022 12:23 AM | Last Updated : 09th December 2022 12:23 AM | அ+அ அ- |

கடையநல்லூா் பகுதியில் முதல்வரின் வாகனம் வந்த போது அங்கு திரண்டிருந்த திமுகவினா் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி வடக்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்த மா.செல்லத்துரை, அப்பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு தலைமை செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், மாவட்டச் செயலராக அவா் நீடிக்கவ வேண்டும் எனவும் திமுகவினா் கட்சியின் தலைமைக்கு மனு அனுப்பி இருந்தனா்.
இந்நிலையில், கடையநல்லூா் பகுதியில் முதல்வா் வந்த போது அங்கு திரண்டிருந்த திமுகவினா் சிலா், மீண்டும் செல்லத்துரைக்கு மாவட்ட செயலா் பதவி வேண்டும் என முழக்கமிட்டனா். தொடா்ந்து, கட்சியினா் முதல்வரை வரவேற்று பூங்கொத்து வழங்கினா். அதை முதல்வா் பெற்றுக் கொண்டாா்.