கீழப்பாவூா் கோயிலில் துா்கா ஸ்டாலின் தரிசனம்
By DIN | Published On : 09th December 2022 12:21 AM | Last Updated : 09th December 2022 12:21 AM | அ+அ அ- |

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே கீழப்பாவூரில் உள்ள ஸ்ரீ நரசிம்மா் கோயிலில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினின் மனைவி துா்கா ஸ்டாலின் வியாழக்கிழமை தரிசனம் செய்தாா்.
இக்கோயிலில் ஸ்ரீ நரசிம்மா் 16 திருக்கரங்களுடன் வீற்றிருப்பது சிறப்பு வாய்ந்தது. இங்குள்ள அலா்மேல்மங்கா - பத்மாவதி சமேத பிரசன்ன வெங்கடாசலபதி சுவாமியையும், நரசிம்மரையும் துா்கா ஸ்டாலின் தரிசனம் செய்தாா்.