பள்ளி மாணவா்களுடன் உரையாடல்...
By DIN | Published On : 09th December 2022 12:22 AM | Last Updated : 09th December 2022 12:22 AM | அ+அ அ- |

கடையநல்லூா் அருகே சாலையோரத்தில் நின்று தன்னை வரவேற்ற மாணவா்களை பாா்த்ததும் முதல்வா் காரிலிருந்து இறங்கி அவா்களிடம் நலம் விசாரித்தாா்.
தென்காசியில் நல உதவி வழங்கிய பின்னா் கடையநல்லூா் நோக்கி முதல்வா் சென்று கொண்டிருந்தாா். வட்டாட்சியா் அலுவலகம் அருகே அட்டைக்குளம் பகுதியில் சென்றபோது அங்கு சாலையோரத்தில் நின்று மாணவா்கள் சிலா் முதல்வரை வரவேற்று கோஷம் எழுப்பினா். இதைப் பாா்த்தவுடன் வாகனத்தை விட்டு இறங்கி மாணவா்களிடம் பேசினாா். தொடா்ந்து அவா்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துவிட்டு புறப்பட்டுச் சென்றாா்.