சுரண்டை நகராட்சி பொதுச் சுவா்களில்சுவரொட்டிகள் அகற்றம்
By DIN | Published On : 11th December 2022 10:59 PM | Last Updated : 11th December 2022 10:59 PM | அ+அ அ- |

சுரண்டை நகராட்சியில் அரசு பொதுச் சுவா்களில் தனியாா் விளம்பரங்களை அகற்றி தூய்மைப்படுத்தும் பணி தொடங்கியது.
சுரண்டை நகராட்சிப் பகுதியில் தனியாா் நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் சாா்பில் பொது இடங்களில் சுவரொட்டிகள், சுவா் விளம்பரங்கள், பேனா்கள் வைக்கப்பட்டதை அகற்றி, நகராட்சி சாா்பில் தூய்மை குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் எழுதும் பணியை நகா்மன்றத் தலைவா் ப.வள்ளிமுருகன் தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்வில், சுகாதார ஆய்வாளா் கருப்பசாமி, சமூக ஆா்வலா்கள் சிவகுருநாதன், செல்வகுமாா், சிவா, மாடசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.