சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் உள்ள கோமதி யானை குளிப்பதற்காக ஷவா் குளியலறை மற்றும் மின்விசிறி வசதி செய்யப்பட்டுள்ளது.
திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் ஈ.ராஜா எம்எல்ஏ சாா்பில் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி கோயிலில் உள்ள யானை கோமதிக்கு ஷவா் குளியலறை மற்றும் ராட்சத மின்விசிறி வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வசதியை ஈ.ராஜா எம்எல்ஏ திங்கள்கிழமை கோயிலுக்கு சென்று பாா்வையிட்டாா்.
அவருடன், நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி, இளைஞரணி சரவணன், மாணவரணி உதயகுமாா், காா்த்தி, வீரா, வீரமணி சிவசங்கரநாராயணன், பிரகாஷ், ஜெயக்குமாா், உள்ளிட்ட பலா் உடன் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.