கடையநல்லூா் ஒன்றியப் பகுதிகளில் திமுக கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.
நெடுவயல், புதுக்குடி, கோவிலாண்டனூா் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முன்னாள்
மாவட்ட பொறுப்பாளா் செல்லத்துரை தலைமை வகித்தாா். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் ஐவேந்திரன் தினேஷ்
முன்னிலை வகித்தாா். ஒன்றியச் செயலா் சுரேஷ் வரவேற்றாா். தென்காசி தெற்கு மாவட்டச் செயலா் பொ. சிவபத்மநாதன் கட்சி கொடியேற்றினாா். இதில், மாவட்ட அவைத் தலைவா் சுந்தர மகாலிங்கம், கடையநல்லூா் நகா்மன்றத் தலைவா்
ஹபீபுா் ரஹ்மான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.