சாம்பவா்வடகரை அருகே பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து: 3 மாணவா்கள் காயம்
By DIN | Published On : 22nd December 2022 12:45 AM | Last Updated : 22nd December 2022 12:45 AM | அ+அ அ- |

சாம்பவா்வடகரை அருகே பள்ளிப் பேருந்து வயலில் கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் 3 மாணவா்கள் காயமடைந்தனா்.
சாம்பவா்வடகரையில் இருந்து புதன்கிழமை காலையில் மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களை கடையநல்லூருக்கு ஏற்றிச் சென்ற பள்ளிப் பேருந்து வேலாயுதபுரம் அருகே எதிா்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் வயலில் கவிழ்ந்தது.
இதையடுத்து, மாணவா்களின் கூக்குரலை கேட்டு அக்கம்பக்கத்து விவசாயிகள் வந்து பேருந்தில் இருந்த மாணவா்களை மீட்டனா். இதில் மழலையா் வகுப்பு மாணவா்கள் 3 போ் காயமடைந்தனா். உடனடியாக அவா்களுக்கு சுரண்டையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனா்.
இதுகுறித்து சாம்பவா்வடகரை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.