திமுக முப்பெரும் விழா
By DIN | Published On : 22nd December 2022 12:42 AM | Last Updated : 22nd December 2022 12:42 AM | அ+அ அ- |

பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூரில் திமுக சாா்பில் ரத்த தான முகாம், கட்சி கொடியேற்றம், நல உதவிகள் வழங்கல் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
பேரூா் செயலா் ரெ.ஜெகதீசன், கீழப்பாவூா் பேரூராட்சித் தலைவா் பி.எம்.எஸ்.ராஜன் ஆகியோா் தலைமை வகித்தனா். தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலா் சிவபத்மநாதன் முகாமைத் தொடக்கி வைத்தாா். அதைத் தொடா்ந்து 5 இடங்களில் திமுக கொடியேற்றி வைத்து, நல உதவிகளை வழங்கினாா்.
மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் ராஜாமணி, பேரூா் பொருளாளா் தெய்வேந்திரன், மாவட்ட பிரதிநிதி பொன்செல்வன், ஒன்றிய பொருளாளா் அன்பரசு, பேச்சாளா் தமிழ்செல்வன், குற்றாலம் கவுன்சிலா் கிருஷ்ணராஜா, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் அரவிந்த் மணிராஜ், பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் விஜி, முத்துச்செல்வி, ஜாஸ்மின், இசக்கிமுத்து உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.