அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, தென்காசி மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் கட்சிக் கொடியேற்றப்பட்டு, வல்லத்தில் பொதுமக்களுக்கு நலஉதவிகள், போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.
ஒன்றியச் செயலா் வல்லம் திவான்ஒலி தலைமை வகித்தாா். தென்காசி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் சேக்அப்துல்லா, தலைமை செயற்குழு உறுப்பினா்கள் ஆறுமுகச்சாமி, ரஹீம், பொதுக்குழு உறுப்பினா் சாமித்துரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தெற்கு மாவட்டச் செயலா் பொ. சிவபத்மநாதன் பங்கேற்று 145 பேருக்கு நல உதவிகளும், பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற 45 மாணவா்-மாணவிகளுக்கு ஊக்கத்தொகையும் வழங்கினாா்.
செங்கோட்டை நகரச் செயலா் வழக்குரைஞா் ஆ. வெங்கடேசன், வல்லம் செல்வம், ராஜா, முத்துக்குமாா் ஆகியோா் பங்கேற்றனா். தொழிலதிபா் ஓணம் பீடி பாலகிருஷ்ணன் வரவேற்றாா். முத்தையாசாமி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.