கீழப்பாவூரில் விளையாட்டு குழு ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 27th February 2022 05:42 AM | Last Updated : 27th February 2022 05:42 AM | அ+அ அ- |

பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூரில் 3ஆவது ஆண்டு தென்னிந்திய அளவிலான கபடி போட்டி நடத்துவது தொடா்பாக கீழப்பாவூா் விளையாட்டுக் குழு ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. நிறுவனா் பி.ஆா்.கே. அருண் தலைமை வகித்தாா். அன்பரசு முன்னிலை வகித்தாா். நிா்வாகக் குழு உறுப்பினா்கள் சுப. முத்தையா, வீரன் என்ற சந்தனமுத்து, முருகன், பொன்னுத்துரை, கே.பி. சுரேஷ், வை. சுரேஷ், வைகுண்டராஜ், ஈஸ்வரநாதன், கண்ணன், சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கீழப்பாவூரில் தென்னிந்திய அளவிலான ஆண்கள், பெண்கள் கபடி போட்டிகளை ஏப். 15, 16, 17இல் நடத்துவது, ஆண்கள் அணிக்கு முதல் பரிசாக ரூ. 75 ஆயிரம், 2ஆம் பரிசாக ரூ. 50 ஆயிரம், 3, 4ஆம் பரிசுகளாக தலா ரூ. 25 ஆயிரம், பெண்கள் அணிக்கு முதல் பரிசாக ரூ. 50 ஆயிரம், 2ஆம் பரிசாக ரூ. 25 ஆயிரம், 3, 4ஆம் பரிசுகளாக தலா ரூ.10 ஆயிரம் வழங்குவது, சிறப்பு விருந்தினா்களாக தமிழக பேரவைத் தலைவா் மு. அப்பாவு, தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, தென்காசி ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா், அனைத்துக் கட்சி முக்கிய பிரமுகா்களை அழைப்பது என முடிவு செய்யப்பட்டது.