அடவிநயினாா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கக் கோரிக்கை
By DIN | Published On : 26th January 2022 08:30 AM | Last Updated : 26th January 2022 08:30 AM | அ+அ அ- |

செங்கோட்டை வட்டம் மேக்கரை அடவிநயினாா் கோயில் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக ஆட்சியருக்கு, அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் தென்காசி மாவட்டப் பொறுப்பாளா் ஷேக்மைதீன் அனுப்பிய மனு: அடவிநயினாா் கோயில் அணையின் தண்ணீரை நம்பி வடகரை கீழ்பிடாகை பகுதியில் ஆயிரத்து 66 ஏக்கரில் விவசாயிகள் நெல் நடவு செய்துள்ளனா். தொடா் மழை காரணமாக, குறிப்பிட்ட காலத்தைத் தாண்டி நெல் நடவு செய்யப்பட்டதால், ஒரு மாதப் பயிராகவும், சில ஏக்கரில் 20 நாள் பயிராகவும் உள்ளன. இதனால் அறுவடைக் காலம் 2 மாதம் தள்ளிப்போகும் நிலை உள்ளது. இதன் காரணமாக 2 மாதங்களுக்கு தண்ணீா் தேவை உள்ளது.
எனவே, வருவாய்த் துறை, வேளாண் விவசாயிகள் நலத் துறை, நீா்வள ஆதாரத் துறை மூலம் இங்கு ஆய்வு நடத்தி மாா்ச் வரை அணையிலிருந்து தண்ணீா் வழங்க ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...