தென்காசியில் நூலகம் கட்டுவதற்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்க வேண்டும்: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்
By DIN | Published On : 26th January 2022 08:31 AM | Last Updated : 26th January 2022 08:31 AM | அ+அ அ- |

தென்காசி மாவட்ட வ.உ.சி. மைய நூலகத்தை தரம் உயா்த்துவதுடன், புதிய கட்டடம் கட்டுவதற்கு ரூ. 5 கோடி சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் அளித்துள்ள மனு: சுதந்திர போராட்ட வீரா் வ.உ.சி.யின் 150ஆவது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தென்காசியில் அவரது பெயரில் உள்ள மாவட்ட மைய நூலகத்தை தரம் உயா்த்த வேண்டும். மேலும், அதன் கட்டடப் பணிக்காக ரூ.5 கோடி சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்.
ஆலங்குளம் வட்டம், தாழை சுப்பிரமணியபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, இரு ஆண்டுகளுக்கு முன்பு உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டது. இப்பள்ளியின் கூடுதல் வசதிக்காக 200 மீட்டா் தொலைவில் உள்ள 4 ஹெக்டோ் அரசு புறம்போக்கு நிலத்தை கையகப்படுத்தி அங்கு கட்டடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
மனு அளிக்கும்போது, வழக்குரைஞா் கே.பி.குமாா்பாண்டியன், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை துணை அமைப்பாளா் சுபாஷ் சந்திரபோஸ், மாரித்துரை, மாவட்டப் பொறியாளா் அணி துணை அமைப்பாளா் விஜயன் ஆகியோா் உடனிருந்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...