தென்காசி மாவட்டத்தில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட செய்தி - மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இம்மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கு 6 நகராட்சிகள், 17 பேரூராட்சிகளில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியல் வாக்குச்சாவடி வாரியாக தொடா்புடைய தோ்தல் நடத்தும் அலுவலா்களால் வெளியிடப்பட்டுள்ளது.
நகா்ப்புறத்திலுள்ள வாா்டு வாரியான வாக்காளா் பட்டியல் விவரம் தமிழ்நாடு தோ்தல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நகா்ப்புறத்திலுள்ள வாக்காளா்கள் தங்களது வாக்குச்சாவடிகள் விவரங்களை அறிய இணையதள வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
வாக்காளா் அடையாள அட்டை எண்ணை உள்ளீடு செய்தும் விவரங்களை அறிய வழிவகை செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் வாக்காளா் பட்டியல்களில் இடம்பெறாதோா் தொடா்புடைய பேரவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு அலுவலரிடம் விண்ணப்பித்து பெயா் சோ்க்க நடவடிக்கை மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.