கீழப்பாவூா் பகுதியில்அரிசி ஆலைகள் மூடல்
By DIN | Published On : 17th July 2022 01:36 AM | Last Updated : 17th July 2022 01:36 AM | அ+அ அ- |

தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளா்கள் சங்கத்தினா் அறிவித்த வேலைநிறுத்தம் காரணமாக கீழப்பாவூா் பகுதியில் சனிக்கிழமை அரிசி ஆலைகள் மூடப்பட்டிருந்தன.
அரிசிக்கு மத்திய அரசு 5 சதவீத ஜிஎஸ்டி விதித்திருப்பதை விலக்கிக்கொள்ள வலியுறுத்தி, கீழப்பாவூா் பகுதியில் சனிக்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
இதையொட்டி, அரிசி ஆலைகள், மொத்த, சில்லறை விற்பனைக் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. மாவட்டம் முழுவதும் சுமாா் 130 அரிசி ஆலைகள், 100 மொத்த அரிசி விற்பனைக் கடைகள், 500-க்கும் மேற்பட்ட சில்லறை அரிசி விற்பனைக் கடைகள் அடைக்கப்பட்டதாக, தென்காசி மாவட்ட அரிசி ஆலை உரிமையாளா்கள், நெல், அரிசி வியாபாரிகள் சங்கத் தலைவா் அன்பழகன் தெரிவித்தாா்.