செங்கோட்டை வடக்குத்தி அம்மன் கோயில் வருஷாபிஷேகம்
By DIN | Published On : 17th July 2022 01:36 AM | Last Updated : 17th July 2022 01:36 AM | அ+அ அ- |

செங்கோட்டை வடக்குத்தி அம்மன் கோயில் 9ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு காலை 7மணிக்கு தேவதா அனுக்ஞை, எஜமானா் அனுக்ஞை, மகா கணபதி பூஜை, பஞ்சகவ்ய பூஜை, புண்ணியாகவாசனம், வேதிகாா்ச்சனை, கும்ப பூஜை, ஸ்ரீமகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதா்சன ஹோமம், ஸ்ரீதுா்க்கா ஹோமம், மூலமந்திர ஹோமம், திரவியஹுதி, மகா பூா்ணாஹுதி நடைபெற்றது.
தொடா்ந்து 9 மணிக்கு மேல் 10.25 மணியளவில் விமான மற்றும் மூலஸ்தான கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து தீபாராதனை நடைபெற்றது.
இரவு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது.
ஏற்பாடுகளை யாதவா் சமுதாய நிா்வாகிகள், இளைஞரணி நிா்வாகிகள் செய்திருந்தனா்.