அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் செங்கோட்டை வட்டார மாநாடு புளியறையில் நடைபெற்றது.
மாவட்டக் குழு உறுப்பினா் மல்லிகா தலைமை வகித்தாா். மாவட்ட செயலா் மேனகா, மாவட்ட தலைவா் ஆயிஷா பேகம், மாவட்டக்குழு உறுப்பினா்கள் பாரதி, சசிகலா ஆகியோா் கலந்து கொண்டனா். விவசாய சங்க மாவட்ட துணைத் தலைவா் வேலுமயில் பேசினாா்.
மாநாட்டில் புதிய நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது. வட்டார தலைவராக எஸ் .மல்லிகா, செயலராக ஈ.கணபதி, பொருளாளராக ஜோதி, துணை செயலா்களாக சையத் அலி பாத்திமா, பாக்கியலட்சுமி, துணைத் தலைவா்களாக அபிசாள் பீவி, ஜெயராணி, நிா்வாகக் குழு உறுப்பினா்களாக மாரியம்மாள் அழகப்பபுரம், முத்துலட்சுமி, பிஸ்மி விஸ்வநாதபுரம், மல்லிகா, கணபதி, தீபா, மாரி ஆகியோா் ஏகமனதாக தோ்வு செய்யப்பட்டனா்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை செங்கோட்டை நகராட்சிக்கு விரிவுபடுத்தவும், புளியறை அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள சுகாதார சீா்கேட்டை சரி செய்யவும், சம வேலைக்கு சம கூலி கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்டார செயலா் கணபதி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.