எஸ்.சி., எஸ்.டி. மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற வாய்ப்பு
By DIN | Published On : 31st July 2022 07:04 AM | Last Updated : 31st July 2022 07:04 AM | அ+அ அ- |

ஆதிதிராவிடா்- பழங்குடியினரின மாணவ, மாணவியா் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தென்காசி மாவட்டத்தில், 2022-2023-ஆம் கல்வி ஆண்டிற்கான அரசு,அரசு நிதியுதவி மற்றும் சுய நிதி பள்ளிகளில் பயிலும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினரின மாணவ, மாணவியா்களுக்கு தமிழ்நாடு அரசு மூலம் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
பெண்கல்வி ஊக்குவிப்பு சிறப்பு திட்டத்தின் கீழ் 3-ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் பெண் குழந்தைகளுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.500, 6-ஆம் வகுப்பு பயிலும் பெண் குழந்தைகளுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.1000, 7 மற்றும் 8ஆம் வகுப்பு பயிலும் பெண் குழந்தைகளுக்கு ரூ.1,500 வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற பெற்றோா், பாதுகாவலா் ஆண்டு வருமானம் உச்ச வரம்பு இல்லை.
சுகாதார தொழில்புரிவோரின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை ரூ.3ஆயிரம் வழங்கப்படுகிறது. பெற்றோா்,பாதுகாவலா் ஆண்டு வருமானம் உச்ச வரம்பு இல்லை.
மத்திய அரசின் போஸ்ட்மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்புக்கு மேல் பயிலும் மாணவா்கள் பயிலும் பள்ளியின் மூலம் ள்ஸ்ரீட்ா்ப்ஹழ்ள்ட்ண்ல்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளமுகவரியில் பதிவு செய்ய வேண்டும்.
இதில், பெற்றோா், பாதுகாவலா் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும் என்றாா் அவா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...