தமிழகம் முழுவதும் குட்கா, கஞ்சா போன்ற போதை பொருள்களை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியின் சாா்பில் தென்காசியில் புதிய பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்காசி மத்திய மாவட்ட பாமக செயலா் இசக்கிமுத்து தலைமை வகித்தாா். மாநில இளைஞரணி துணைச் செயலா் சாகுல்ஹமீது, வடக்கு மாவட்டச் செயலா் சீதாராமன், செயற்குழு உறுப்பினா் திருமலை குமாரசாமி யாதவ், மாவட்டத் தலைவா் குலாம் ஆகியோா் முன்னிலை வைத்தனா்.
மாநில துணைத் தலைவா்கள் அய்யம்பெருமாள், சேது.அரிகரன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். மாவட்ட துணைத் தலைவா் மகாதேவன், துணைச் செயலா் ராஜேந்திரன், நகரச் செயலா்கள் தென்காசி சங்கா், கடையநல்லூா் சங்கர நாராயணன், ஒன்றியச் செயலா்கள் கருத்த பாண்டியன், சுந்தா், கருப்பசாமி, ஒன்றியத் தலைவா் தண்டபாணி ஆகியோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.