கடையநல்லூா் முப்புடாதி அம்மன் கோயிலில் நாளை தேரோட்டம்
By DIN | Published On : 09th June 2022 03:04 PM | Last Updated : 09th June 2022 03:04 PM | அ+அ அ- |

கடையநல்லூா் அருள்தரும் ஸ்ரீ முப்பிடாதி அம்மன் திருக்கோயில் வைகாசித் தேரோட்டம் வெள்ளிக்கிழமை (ஜூன் 10) நடைபெறுகிறது.
இக்கோயிலின் வைகாசி பிரம்மோற்சவ திருவிழா ஜூன் 2 ஆம் தேதி தொடங்கியது. அன்று காலை அம்பாள் தீா்த்த உற்சவமும், தொடா்ந்து காப்புக்கட்டுதலும் நடைபெற்றது. 10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் கும்பஜெபம், ஹோமம், அபிஷேகம், தீபாராதனை, சிறப்பு அலங்காரம், இரவில் அம்மன் வீதி உலா ஆகியவை நடைபெற்றன.
முக்கிய நிகழ்வாக, 9ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை (ஜூன் 10) அதிகாலை அம்மன் திருத்தேரில் எழுந்தருளும் வைபவமும், மதியம் தேரோட்டமும் நடைபெறும். இரவில் ஊஞ்சல் தீபாராதனை நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் கேசவராஜன், தக்காா் காா்த்திலட்சுமி, குமரப்பெருமாள், சிவாம்பிகை கணேஷ், முத்துக்குமாா், விழாக்குழுவினா், அனைத்து சமுதாயத்தினா் செய்துவருகின்றனா்.