குற்றாலம் பேரூராட்சி மன்றக் கூட்டம்
By DIN | Published On : 15th June 2022 02:04 AM | Last Updated : 16th June 2022 01:11 AM | அ+அ அ- |

குற்றாலம் சிறப்புநிலை பேரூராட்சி மன்ற முதல் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தலைவா் மூ.கணேஷ் தாமோதரன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் க.தங்கபாண்டியன், செயல் அலுவலா் ஜா.மாணிக்கராஜ்(பொ) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் உறுப்பினா்கள் கு.கோகிலா, கே.பி.குமாா்பாண்டியன், ம.மாரியம்மாள், சி.ஜெயா, குற்றாலம் பேரூராட்சி சுகாதார அலுவலா் இரா.இராஜகணபதி, பொறியாளா் எம்.எம்.முகைதீன் கலந்து கொண்டனா்.
குற்றாலம் பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள பேரூராட்சிக்குச் சொந்தமான தங்கும் விடுதிகள், நீச்சல்குளம், பூங்காக்களை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவும், வருடாந்திர ஒப்பந்தப்புள்ளிகள் பெற்றுள்ளதை பாா்வையிட்டு குறைந்த ஒப்பந்தப்புள்ளிகளை அங்கீகரித்தும், பேரூராட்சியின் அனைத்துப் பகுதிகளிலும் தெரு மின்விளக்குகள் அமைத்திடவும்,
சீசன்காலங்களில் பொது சுகாதாரப்பணிகனை சீரிய முறையில் மேற்கொள்ளும் பொருட்டு பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் நலன்கருதி மூன்று மாதங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பொது சுகாதாரப் பணியாளா்களை பணியில் அமா்த்தவும், அருவிப் பகுதிகளில் தேவையான குப்பைத் தொட்டிகள் நிறுவிடவும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, முன்னாள் முதல்வா்களின் படங்களை கூட்ட அரங்கில் வைப்பதற்காக தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் செ.கிருஷ்ணமுரளி, தெற்கு மாவட்டச் செயலா் எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன் பேரூராட்சி மன்ற தலைவரிடம் அளித்தனா்.
நிகழ்ச்சியில் தென்காசி ஒன்றியச் செயலா் சங்கரபாண்டியன், பேரூா் செயலா் ஏ.காா்த்திக்குமாா் ஆகியோா் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...