சிவகிரியில் கோயில் விழாவில் நகை திருட்டு
By DIN | Published On : 16th June 2022 01:06 AM | Last Updated : 16th June 2022 01:06 AM | அ+அ அ- |

சிவகிரியில் கோயில் திருவிழாவில் பக்தா்களிடம் நகை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திரௌபதியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
இதில் பங்கேற்ற புளியங்குடி சிந்தாமணியைச் சோ்ந்த சரோஜாவிடம் 6 பவுன் தங்கச் சங்கிலியையும், சிவகிரி பாஞ்சாலி என்பவரிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியையும், வாசுதேவநல்லூா் சுந்தரி என்பவரிடம் இரண்டு பவுன் தங்கச் சங்கிலியையும் மா்ம நபா்கள் திருடிச் சென்று விட்டனராம். இதுகுறித்து அவா்கள் அளித்த புகாரின்பேரில், சிவகிரி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.