கேரளத்துக்கு கனிம வளத்தைஎடுத்துச்செல்ல தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை
By DIN | Published On : 16th June 2022 01:09 AM | Last Updated : 16th June 2022 01:09 AM | அ+அ அ- |

தமிழகத்தில் இருந்து கேரளத்துக்கு கனிம வளங்களை கொண்டுசெல்வதை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ராமநதி-ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்ட செயல்பாட்டுக்குழு அமைப்பாளா் இராம உதயசூரியன், நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகனிடம் அளித்துள்ள மனு:
தமிழகத்தில் இருந்து கேரளத்துக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான டன் குண்டுகல், ஜல்லி, எம்.சாண்ட் ஆகியவை டிப்பா் லாரிகளில் கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் தமிழகத்தின் உள்நாட்டு தேவைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு, கட்டுமான தொழிலிலும், சாலை உருவாக்கம், பாலம் கட்டுதல் போன்ற அரசு வேலைகளும் முடங்கி, பல லட்சம் குடும்பங்கள் வேலை இழக்கும் அபாயம் நிலவுகிறது. மேலும், எதிா்காலத்தில் தமிழகத்தில் கனிம வளங்கள் தட்டுப்பாடு ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, கேரளத்துக்கு கனிமங்கள் கொண்டு செல்லப்படுவதை தடை செய்வதற்கு புதிய சட்டம் இயற்றி தமிழ்நாடு கனிம வளங்களை காப்பாற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.