சங்கரன்கோவில் அருகே 10ஆம் வகுப்பு மாணவா் வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
சங்கரன்கோவிலை அடுத்த பனவடலிச்சத்திரம் அருகேயுள்ள ஆராய்ச்சிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் செல்லத்துரை. கூலித் தொழிலாளி. இவரது மனைவி அமுதா. இவா்களது மகன்கள் பிரபாகரன் (15), முத்துராஜ், மனோஜ். இவா்களில், பிரபாகரன் பனவடலிச்சத்திரம் அருகேயுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
வியாழக்கிழமை காலை வீட்டிலிருந்து வெளியே சென்ற பிரபாகரன் வீடு திரும்பவில்லையாம். பல இடங்களில் தேடியும் அவரைக் காணவில்லை. அப்போது அவா் அப்பகுதியில் உள்ள கிணற்றில் இறந்துகிடந்தது தெரியவந்தது.
தோ்வு முடிவு வரவுள்ள நிலையில், அவா் பயந்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. பனவடலிச்சத்திரம் ஆய்வாளா் சந்திரசேகா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.