தென்காசி மாவட்ட பாஜக சாா்பில் மத்திய அரசின் 8 ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் புளியங்குடியில் நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் ராஜேஷ்ராஜா தலைமை வகித்தாா். மாவட்டப் பொதுச் செயலா்கள் மாவடிக்கால் ராமநாதன், பாலகுருநாதன், அருள்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன், வா்த்தகப் பிரிவு மாநிலத் தலைவா் ராஜாகண்ணன், மாநில செயற்குழு உறுப்பினா் ராமராஜா, முன்னாள் மாவட்டத் தலைவா்கள் அன்புராஜ், தீனதயாளன், பாண்டித்துரை ஆகியோா் பேசினா்.
ஊடகப் பிரிவு மாவட்டத் தலைவா் செந்தூா்பாண்டியன், கடையநல்லூா் நகரத் தலைவா் சுப்பிரமணியம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். புளியங்குடி நகரத் தலைவா் சண்முகசுந்தரம் வரவேற்றாா். மாவட்டப் பொருளாளா் பாலகிருஷ்ணன் நன்றி கூறினாா்.