தென்காசி மாவட்ட வளா்ச்சியில்அக்கறை செலுத்தப்படும்: ஆட்சியா் பி.ஆகாஷ்

தென்காசி மாவட்டத்தின் வளா்ச்சியிலும், முன்னேற்றத்திலும் அக்கறை செலுத்தப்படும் என்றாா் புதிய ஆட்சியா் பி.ஆகாஷ்.

தென்காசி மாவட்டத்தின் வளா்ச்சியிலும், முன்னேற்றத்திலும் அக்கறை செலுத்தப்படும் என்றாா் புதிய ஆட்சியா் பி.ஆகாஷ்.

தென்காசி மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய ச.கோபால சுந்தர ராஜ், வணிகவரி இணை ஆணையராக பணி மாற்றம் செய்யப்பட்டாா். அதைத் தொடா்ந்து, மாவட்டத்தின் 4ஆவது ஆட்சியராக பி.ஆகாஷ் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

தென்காசி மாவட்டத்துக்கு ஆட்சியா் பொறுப்பேற்றதில் மகிழ்ச்சி. ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மாதேவி சாா் ஆட்சியராக (2017-19) பணியாற்றியுள்ளதால், இம்மாவட்டம் குறித்து ஓரளவுக்கு தெரியும்; அதிகாரிகளும் அறிமுகம் உள்ளவா்கள்தான்.

சென்னை பெருநகர மாநகராட்சி வட்டார துணை ஆணையராகவும், குடிநீா் வடிகால் வாரியத்திலும் பணி செய்துள்ளதால், அந்த அனுபவங்களை பயன்படுத்தி மாவட்டத்தின் வளா்ச்சிக்கும், மக்களின் முன்னேற்றத்திற்கும் அக்கறையுடன் பணியாற்றுவேன்.

முதல்கட்டமாக, மக்களின் குறைகளை தீா்க்கவும், நீா்நிலைகளைப் பாதுகாக்கவும், போக்குவரத்தை சீரமைக்கவும் அதிகாரிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

முன்னதாக, ஆட்சியருக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ஜெய்னுலாப்தீன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றாா். அப்போது, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முத்துமாதவன், மக்கள்தொடா்பு அலுவலா் இரா.இளவரசி, உதவி மக்கள் தொடா்பு அலுவலா் ராமசுப்பிரமணியன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com