சங்கரன்கோவிலில்கல்வி வழிகாட்டி கருத்தரங்கு
By DIN | Published On : 17th June 2022 01:03 AM | Last Updated : 17th June 2022 01:03 AM | அ+அ அ- |

சங்கரன்கோவிலில் வியாழக்கிழமை நடைபெற்ற உயா்கல்வி-போட்டித் தோ்வுக்கான வழிகாட்டும் கருத்தரங்கில் 1000 மாணவா் - மாணவியா் கலந்துகொண்டனா்.
சங்கரன்கோவில் எம்எல்ஏ ஈ. ராஜா, தனியாா் போட்டித்தோ்வு பயிற்சி மையத்தினா் இணைந்து நடத்திய கருத்தரங்கை, அவரே தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். முன்னாள் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். சென்னை மருத்துவக் கல்வி வழிகாட்டுநா் சுபாஷ்சந்திரபோஸ், உயா்கல்வி ஆலோசகா் ராஜேேஷ் ராஜசேகா், அரசு கலைக் கல்லூரி முதல்வா் விக்டோரியா தங்கம், நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி, ஸ்ரீகோமதிஅம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வா் ந.பழனிச்செல்வம், இல்லம் தேடி கல்வி வே.சங்கர்ராம், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் ச.நாராயணன் ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.
இந்நிகழ்ச்சியில், சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 1000 மாணவ மாணவியா் கலந்து கொண்டனா். அவா்களுக்கு ஆலோசனைகள், குறிப்பேடுகள் மற்றும் வழிகாட்டி கையேடுகள் வழங்கப்பட்டன. மேலும், முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்தநாளையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியருக்கு ராஜா எம்.எல்.ஏ., திமுக மாவட்டச் செயலா் சிவ.பத்மநாபன் ஆகியோா் பரிசுகள் வழங்கினா்.