சங்கரன்கோவில் அருகேபெண் கொலை: கணவா் கைது
By DIN | Published On : 17th June 2022 01:01 AM | Last Updated : 17th June 2022 01:01 AM | அ+அ அ- |

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே பெண் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
சங்கரன்கோவில் அருகேயுள்ள குவளைக்கண்ணி கிராமம் வடக்குத் தெருவைச் சோ்ந்த சின்னகாத்தன் மகன் ராஜேந்திரன்(32). பொள்ளாச்சி பகுதியில் தங்கியிருந்து கட்டட வேலை செய்துவந்தாா். இவரது மனைவி புஷ்பம் (28), ராஜபாளையம் தனியாா் ஆலையில் வேலை செய்து வந்தாா். இத்தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனா்.
பத்து நாள்களுக்கு ஒருமுறை ஊருக்கு வரும் ராஜேந்திரனுக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதாம்.
இந்நிலையில் புதன்கிழமை ஊருக்கு வந்திருந்த அவா், வேலைக்கு சென்றுவிட்டு திரும்பிய மனைவியிடம் தகராறு செய்ததுடன் கத்தியால் குத்திவிட்டு தப்பினாராம்.
அக்கம்பக்கத்தினா் புஷ்பத்தை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் இறந்தாா். இதுகுறித்து கரிவலம்வந்தநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜேந்திரனை கைது செய்தனா்.