சுரண்டை அருகேயுள்ள கரையாளனூரில் பகுதிநேர புதிய நியாயவிலைக் கடை திறப்பு விழா நடைபெற்றது.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் தலைமை வகித்தாா். ஆலங்குளம் வடக்கு ஒன்றிய திமுக செயலா் அன்பழகன், ஒன்றியக்குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தென்காசி எம்எல்ஏ சு. பழனிநாடாா் நியாயவிலைக் கடையைத் திறந்துவைத்து, குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்களை வழங்கினாா். குரிச்சான்பட்டி ஊராட்சித் தலைவா் மகரஜோதி, கரையாளனூா் சண்முகவேல், மாவட்ட காங்கிரஸ் பொருளாளா் முரளிராஜா, பிரபாகா், பொதுமக்கள் பங்கேற்றனா்.