சங்கரன்கோவில் கல்வி மாவட்ட அதிகாரி மயங்கி விழுந்து உயிரிழப்பு
By DIN | Published On : 17th June 2022 12:55 AM | Last Updated : 17th June 2022 12:55 AM | அ+அ அ- |

தென்காசி மாவட்ட புதிய ஆட்சியரைச் சந்திக்க வியாழக்கிழமை காத்திருந்த கல்வி மாவட்ட அதிகாரி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
சங்கரன்கோவில் கல்வி மாவட்ட அதிகாரி சுப்பிரமணியன் (56). இவா், புதிய ஆட்சியரை மரியாதை நிமித்தம் சந்திக்க தென்காசிக்கு வியாழக்கிழமை வந்தாா். சக அதிகாரிகளுடன் காத்திருப்போா் அறையிலிருந்தபோது அவா் திடீரென மயங்கி விழுந்தாராம். அவரை உடனடியாக அங்குள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரைப் பரிசோதித்த மருத்துவா், சுப்பிரமணியன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தாா்.