தென்மண்டல கைப்பந்துப் போட்டி: மேலநீலிதநல்லூா் கல்லூரி முதலிடம்
By DIN | Published On : 17th June 2022 12:58 AM | Last Updated : 17th June 2022 12:58 AM | அ+அ அ- |

மேலநீலிதநல்லூா் பசும்பொன் முத்துராமலிங்க தேவா் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற தென்மண்டல கைப்பந்துப் போட்டியில் அந்தக் கல்லூரி அணியே முதலிடம் பெற்றது.
மதுரை, விருதுநகா், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 15 அணிகள் பங்கேற்று விளையாடிய இப்போட்டியில், மேலநீலிதநல்லூா் கல்லூரி அணி முதல் இடத்தையும், ஸ்ரீவில்லிபுத்தூா், ஜி. எஸ்.ஹிந்து கல்லூரி 2 ஆம் இடத்தையும், பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி 3 ஆம் இடத்தையும், நாகா்கோவில் தூய அல்போன்சா கல்லூரி அணி 4 ஆம் இடத்தையும் பெற்றன.
வெற்றிபெற்ற அணிகளுக்கு, கல்லூரி முதல்வா் ஹரிகெங்காராம், திருநெல்வேலி மாவட்ட கைப்பந்து சங்கத் தலைவா் சந்திரகுமாா், தென்காசி மாவட்டச் செயலா் ரமேஷ்குமாா் ஆகியோா் பரிசு கோப்பைகளை வழங்கினா். கல்லூரியின் உடற்கல்வி இயக்குநா் முத்துக்குமாா் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை, மேலநீலிதநல்லூா் கல்லூரியின் முன்னாள் மாணவா் சங்கத்தினா் செய்திருந்தனா்.